பங்கரை

சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஒரு காட்சி எனக்கு ரொம்பப் பிடிக்கும். கதாநாயகி ஜெனிலியா, முதல் முறையாக ஜெயம் ரவியின் வீட்டுக்கு வந்திருக்கிறார். ஒருவாரம் தங்கட்டும், பழகட்டும், உங்கள் எல்லோருக்கும் பிடித்திருந்தால் எனக்கு இவளைக் கல்யாணம் பண்ணிவையுங்கள் என்று கதாநாயகனாகப்பட்டவர் தனது தந்தையிடம் ஒரு நூதனமான டீலிங் போட்டிருக்கிறார். அந்த நல்ல குடும்பமானது, ஜெனிலியாவை, புதிதாக மாட்டிய முதல் வருஷ மாணவி மாதிரி ராகிங் செய்யத் தயாராக இருக்கிறது. முதல் நாள் காலை. சாப்பாட்டு மேசையில் குடும்பம் கூடியிருக்கிறது. … Continue reading பங்கரை